குழந்தை வளர்சியில் சரியும்... தவறும்...!
1. குழந்தை அழுதால் மட்டுமே சாப்பாடு கொடுக்கும் வழக்கம் சிலருக்கு உண்டு. இது தவறு. குழந்தையின் பசி அறிந்து உணவளிக்க வேண்டும். இல்லை எனில், குழந்தைக்கு, 'நம்மை யாரும் கவனிக்கவில்லை’ என்ற எண்ணம் வந்துவிடும்.
2. குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கிக்கொடுப்பதோ, எதையும் வாங்கிக்கொடுக்காமல் ஏக்கத்தில் விடுவதோ தவறு. குழந்தைக்கு எது தேவையோ, அதைச் செய்ய வேண்டும்.
3. குழந்தைக்கு என்று தனியாக உணவு கொடுத்து, அதைச் சாப்பிடும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து சாப்பிடப் பழக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களைப் பார்த்துதான் குழந்தை கற்றுக்கொள்ளும்.
4. குழந்தை அடம்பிடிக்கிறது என்பதற்காக சாக்லெட், ஜங்க் ஃபுட் கொடுத்து பழக்கக் கூடாது.
5. குழந்தை முன்னிலையில் சோகத்துடனோ கவலை தோய்ந்த முகத்துடனோ இருக்கக் கூடாது. இவை குழந்தையைப் பாதிக்கும்.
6. டி.வி.யில் வன்முறைக் காட்சிகள், பாலியல் ரீதியான காட்சிகளைப் பார்ப்பதைத் தடுப்பது அவசியம். அவர்களுக்கு அதைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும்கூட மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.
தேவையில்லாத வயதில் தேவையில்லாத தகவல் குழந்தையின் மூளையில் பதிவது ஆபத்து.
உங்க பாப்பாவைப் பத்திரமாப் பார்த்துக்கங்க
By Kani