லண்டன்: பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்சின் மனைவி, கேட் மிடில்டனுக்கு நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஆண் குழந்தை பிறந்தது. பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்சின் மனைவி கேட் மிடில்டன், பிரசவத்திற்காக, லண்டனில் உள்ள செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில், கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார்.
"டிவி' நிகழ்ச்சிகள் : பிரிட்டனின் சில, "டிவி' நிறுவனங்கள், வில்லியம்சின் குழந்தை பற்றி, யூகங்கள் அடிப்படையிலான போட்டிகளை, நடத்தின. "குழந்தை, ஆணா, பெண்ணா? எந்த நாளில், எந்த நேரத்தில் பிறக்கும்? குழந்தைக்கு சூட்டப்படும் பெயர் எதுவாக இருக்கும்?' என்ற கேள்விகளின் அடிப்படையில், விறுவிறுப்பான போட்டிகளை ஒளிபரப்பின. பிறக்க போவது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்ற சூதாட்டங்களும் நடந்தன. இதற்கிடையே, நேற்று நள்ளிரவு, லண்டன் செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில் கேட் மிடில்டனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அறிவிப்பு விவரம் : குழந்தை பிறப்பு பற்றிய செய்தி, முதலில், மருத்துவமனை மருத்துவரின் மூலம், ஒரு சீட்டில் எழுதப்பட்டு, அரண்மனை, கார் ஓட்டுனரிடம் கொடுக்கப்பட்டது. அங்கிருந்து அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அரச குடும்பத்தாரின் ஒப்புதலுக்குப் பின், பொதுமக்களின் பார்வைக்காக, தகவல் பலகையில் ஒட்டப்பட்டது. இந்த முறையான நிகழ்வுகளுக்கு முன்னரே, செய்திகளை ஒளிபரப்பும் ஆர்வத்தில் ஊடகங்கள் செயல்படுவதால், கடிதத்தை தெளிவாக பெரிதாக்கி காட்டும் கேமராக்களுடன், பத்திரிகையாளர்கள் வலம் வந்தனர். மேலும், வில்லியம்சின் மனைவி, கேட், எந்த நேரத்திலும், குழந்தையுடன் மருத்துவமனையிலிருந்து வெளியே வரலாம் என்பதால், மருத்துவமனையின் அனைத்து வாயில்களிலும், ஊடகங்களின் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. "கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், வில்லியமும், அவரது சகோதரர், ஹாரியும் பிறந்தபோது கூட, இத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவில்லை' என, பிரிட்டன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிரிட்டன் மட்டுமின்றி, சீனா, ஜப்பான், கொரியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்களும், மருத்துவமனை வளாகத்தில் முகாமிட்டிருந்தனர். இளவரசிக்கு, குழந்தை பிறந்ததையொட்டி, லண்டனில், 62 குண்டுகள் முழங்கப்பட்டது. தேம்ஸ் நதிக்கரையில், வாணவேடிக்கை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Diana ... and Charles carry William out of the Lindo Wing
Matching outfits ... Diana and Kate both left hospital with their newborns wearing polka dot dresses
It is an important moment in the life of our nation but I suppose above all it’s a wonderful moment for a warm and loving couple who got a brand new baby boy."
Copy The SUn
Copy The SUn
& Editing By Kani Raja
No comments:
Post a Comment