Saturday, November 8, 2014

தாயின் உணர்வுகளை குழந்தைக்கு ஊட்டும் திறனை கொண்ட தாய்பால்

புரோட்டீன், கால்சியம் சத்துக்கள் கொண்ட தாய்ப்பால், குழந்தையின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது. இதில் நிறைய நுண் ஊட்ட சத்துக்கள் இருப்பதால் செரிமான தன்மை அதிகம் உள்ளது. குழந்தையின் உடல் நலத்துக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமானது என்பது அனைவரும் அறிந்த உண்மை. 

ஆனால் இவை அனைத்துக்கும் மேலாக தாயின் உணர்வலைகளை குழந்தைகளுக்கும் ஊட்டும் திறன் படைத்தது என்ற புதிய தகவல் தெரிய வந்துள்ளது. தாய்பாலின் ‘பிரோமோன்’ என்ற ரசாயன சிக்னல் (சமிக்ஞை) உள்ளது. அது தாயிடம் இருந்து குழந்தைக்கு உணர்வலைகளை கடத்துகிறது. மேலும் குழந்தைகளின் உடல் திறன் வளர்ச்சி அடைய வழி வகுக்கிறது. #Dinankaran

No comments: