Friday, February 20, 2015

ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறை

*ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான
*செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
*மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
*கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
*மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
*வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
*தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும
*கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
*காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான்
இருக்கும்.
*நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
*10th 12th ரிசல்ட் பேப்பர் ல பார்த்த கடைசி தலாமுறை நாம தான்
*கதவு வச்ச டிவி ய பாத்த கடைசி தலைமுற நாம தான்
*ஆடியோ கேசட்டில் பாட்டு கேட்டதும் நம்ம தான்.
*சைக்கிளில் கால் எட்டாத போதும் குரங்கு பெடல் ஓட்டியது நம்ம தலைமுறை தான்.
*போஸ்ட் கார்டு ல ரிசல்ட் வந்த தலைமுறை நாம தான்
*ஜவ்வுமிட்டாயில் வாட்ச் கட்டினது
*நாம் படித்த புத்தகத்தை விற்று அதில் வரும் பணத்தை
அடுத்த வகுப்புக்கும் புத்தகங்கள் வாங்கினது,
கோனார் தமிழ் உரை,வெற்றி அறிவியல் உரை
இதெல்லாம் போச்சு.
*நொண்டி, கிட்டிப்புள், பம்பரம், கண்ணாம்பூச்சி, கோலி cf c பலவிதமான விளையாட்டுகளுக்கு கடைசி தலைமுறை நாம்தான்...
*5,10,20,25 பைசா நாணயங்களை கடைசியா பாத்த தலைமுறையும் நாமதான்,
*மண் குழப்பி வீடு கட்டி விளையாடிய கடைசி தலைமுறை
இதையெல்லாம் படிக்கும்போது சிறுதுளி கண்ணில். எட்டி பார்ப்பதும், அதை ரசிக்கும் கடைசி தலைமுறையும் நாம்தான்

ஹிட்லர்

ஜெர்மனியில் ஓர் ஓவியன் பகலெல்லாம் உழைத்து விட்டு இரவு வீட்டுக்கு வருவாராம். இரவில் நெடுநேரம் வரையில் படிப்பாராம். ஐரோப்பாவின் வரைபடத்தைத் தன்முன்னே வைத்துக் கொண்டு, நீண்ட நேரம் அதில் கவனம் செலுத்துவாராம். அதைக் கண்ட வாடகை வீட்டுக்காரப் பெண், பகலெல்லாம் உழைக்கின்றாய். இரவில் தூங்கினால் என்ன? என்னவோ ஐரோப்பாக் கண்டத்தையே உன் கீழ் கொண்டு வரப்போவது போல் பார்த்துக் கொண்டிருக்கிறாயே என்று ஏளனமாகப் பேசினாளாம்.
.
அதைக் கேட்ட அவரோ, ஆம்! மாற்றத்தான் போகின்றேன் என்று உறுதியாகச் சொன்னதோடு அல்லாமல் அப்படியே நிறைவேற்றி காட்டியவர் தான் ஜெர்மனியின் ஹிட்லர்  HitlerKani

கீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்

கீரைகளை உணவில் சேர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்
தேவையான வைட்டமின் சத்துக்களையும், தாதுப் பொருட்களையும் பெற ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும், 75 கிராம் காய்களையும், பருப்பையும் சாப்பிட வேண்டும்.

முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுப்புக்களையும் நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.
1. கீரைகள் விலை மலிவாகயிருப்பதனால் அவைகளில் சத்து இல்லை என்றோ, அதிக விலை கொடுத்து வாங்கும் பழங்களில் தான் சத்து என்றோ நினைத்துவிடக் கூடாது. உதாரணமாக ஒரு கிலோ அரைக் கீரையிலுள்ள இரும்புச்சத்தைப் பெறுவதற்கு 12 கிலோ அன்னாசிப் பழம் சாப்பிட வேண்டும்.
2. இதுபோல் ஒப்புநோக்க முடியாத அளவுக்கு பழங்களைவிட அதிகச் சத்துக்கள் கொண்டவை கீரைகள். இதிலிருந்தே கீரைகளை நாம் உணவில் தினசரி சேர்த்துக் கொள்ள வேண்டியதின் அவசியம் விளங்கும்.
3. வைட்டமின் ஏ நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகிறது. வைட்டமின் ஏ குறைவினால் கண்கள் பார்வை குறைத்து விடும்.
4. வைட்டமின் ஏ, முட்டை, பால் மீன்எண்ணெய் முதலியவைகளிலிருந்தாலும் இவைகள் விலைகள் அதிகமானவை. மலிவான கீரைகளிலிருந்து ஏ வைட்டமினைப் பெறுவதுதான் எளிது. ஏ வைட்டமின் சமைக்கும் போது அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை.
5. அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்கைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கிரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் ஏ அதிகமாகவுள்ளது.
6. வைட்டமின் பி அகத்திக் கீரை, முளைக்கீரை, கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை ஆகியவற்றில் அதிகமாக இருக்கிறது.
7. வைட்டமின் சி சத்துக் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகின்றது. வைட்டமின் சி அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, புண்ணாக்குக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ் கொத்தமல்லி முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது.
8. வைட்டமின் சி சத்து கீரைகளை வேக வைக்கும் போது அழித்துவிடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம் வேக வைக்காமலும், வேவைத்த நீரை இறுத்து விடாமலும் இருக்க வேண்டும். சமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகக் சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும்.
9. நமது இருதயம் சரியாகச் சுருங்கி விரிவதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது.
10. சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக் கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பாலக்கீரை முதலியவற்றில் அபரிமிதமாகக் கிடைக்கின்றது.
11. இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச் சத்துக் குறைவினால் இரத்த சோகை உண்டாகிறது கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும்.
12. இரும்புச் சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக் கீரை முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.
13. மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் சத்துக்களும் தாதுப்புக்களும் ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாகும். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.
14. ஒரு முறை நட்டு விட்டால் பல ஆண்டுகளுக்கு கீரைகளைப் பறிக்கலாம். ஒவ்வொரு தோட்டத்திலும் அவசியம் வளர்க்கப்பட வேண்டிய கீரை தவசிக்கீரையாகும்.
15. வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில போதிய அளவில் கிடைக்கின்றன.
ஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்கக்கூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.

வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்

காற்றைச் சுத்தப்படுத்தும் 
வீட்டுச் செடிகள்...!
வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...
மரத்தையெல்லாம் அழிச்சாச்சுஇனிநல்ல காத்துக்கு எங்கே போறதுஇனிமே மரம்நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்றுசங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி!
வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச்சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது.தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும்அதிக நன்மை களையும்கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...
கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழைகாற்றில் உள்ளஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும்சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப்பயன்படும்!
சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை.அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.
வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவைஅதிகப்படுத்தும்.
மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களைநீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.
ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்துஆக்சிஜனை வெளிப்படுத்தும்வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை.
கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச்சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடிகார்பன்மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்!
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்முடியாதபட்சத்தில்இப்படிப்பட்ட செடிகளையேனும்வளர்ப்போமே!

அந்தக் கால கணக்கு

அந்தக் கால கணக்கு
அந்தக் கால 1 ரூபாய்க்கு 192 தம்பிடிகள். 12 தம்பிடி = 1 அணா, 16 அணா = 1 ரூபாய்
ஒரு அணா - ஆறு பைசா
ஒரு பணம் - ரெண்டு அணா
ஒரு அணா - மூணு துட்டு
ஒரு துட்டு - ரெண்டு பைசா
ஒரு சல்லி - கால் துட்டு
காலணா - முக்கால் துட்டு
அரையணா - ஒன்றரைத் துட்டு
ஒரு அணா - நான்கு காலணா (அ) மாகாணி ரூபாய்
இரண்டு அணா - அரைக்கால் ரூபாய்
நாலணா - கால் ரூபாய்
எட்டு அணா - அரை ரூபாய்
கழஞ்சு - ஒரு பொற்காசு (வராகன்)
வராகன் எடை - 3.63 கிராம்
சக்கரம் - ஒரு வெள்ளிக் காசு
பதினாறு சக்கரம் - ஒரு வராகன்
சக்கரம் - பதினாறு காசு (செப்பு) என மக்கள் பலவிதமாக நாணயக் கணக்கை கையாண்டனர். இன்று நாம் கையாளும் ரூபாய் கணக்கு 1957 முதல் நடைமுறைக்கு வந்தது.