Saturday, April 2, 2011

Fahim Sri Lanka

தோல்வியை ஏற்றுக்கொள்
தோல்வியை ஏற்றுக்கொள்
தோழனே, நீ
தொடர்ந்து செயல்படுவாய்!

தோல்வி என்பது
தூக்குக் கயிறல்ல
உன்னைத் தூண்டும் கோல்
என்பதைப் புரிந்து கொள் - பின்
தோல்வியோடு தோழமை பாராட்டுவாய்.

தோல்வி என்பது
நம் முயற்சிக்கு தடைக்கல் அல்ல
அவ்வப்போது வந்து போகும்
கர்வத்தின் வேகத் தடை.

விடிந்தெழுந்தால் மறைந்துபோகும்
வெற்றியின் களிப்பு.
வாழும் வரை தொடர்ந்து வரும்
வாழ்க்கையின் சின்னமாய்...
தோல்விகள் மட்டும்.

ஒவ்வொரு தோல்வியிலும்
வெவ்வேறு பாடத்தைக்
கற்றுக் கொள்கிறோம்.
வெற்றியால் அடைவது
கர்வத்தை மட்டுமே
காணிக்கையாய்...

தோல்வியைத் தொட்டவன்
ஒருவன் மட்டும்தான்
வாழ்க்கைத் தேர்வில்
தேர்ச்சி பெறுகிறான்.

ஆகையால்,
தோல்வியை ஏற்றுக்கொள்.
தோழனே, நீ
தொடர்ந்து செயல்படுவாய்.


-  Fahim -
நண்பா எனக்கு சந்தோசத்தை தாங்கும் மனம் இருக்கு ஆனால் தோல்வியை தாங்கும் மனம் இல்லை , நான் உன்னிடம் தவறாக எதாவது சொன்னால் மன்னிதுகோல் இப்படிக்கு உன் நண்பன் கனி 



2 comments:

Fahim said...

It's Ok Nanbaaa!!!
Natpukkul Eathu mannippu....

Fahim said...

it's ok Nanbaaa, Natpukkul Eathu Mannippu...