Sunday, June 28, 2015

ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல் உறங்கவேண்டாம்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மருமகன் ஹழ்ரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு உபதேசம் செய்தார்கள்.

“அலியே! ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல் உறங்கவேண்டாம்.

1. முழு குர்ஆனை ஓதாமல் உறங்காதே.

2. தினமும் 4000 தீனார்கள் தர்மம் செய்யாமல் உறங்காதே.

3. கஃபதுல்லாஹ்வை தவாபு செய்யாமல் உறங்காதே.

4. சுவர்க்கத்தில் உனது இடத்தை பாதுகாக்காமல் உறங்காதே.

5. உனது எதிரியைக் (இச்சை) கொல்லாமல் உறங்காதே.
அதற்கு ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு, “நாயகமே! அனைத்தும் ஒரு இரவில் எப்படி சாத்தியம் என கேட்க.. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

1. குல்ஹூவல்லாஹூ சூராவை 3 முறை ஓதினால் குர்ஆன் முழுவதும் ஓதிய நன்மை பெறுவீர்.

2. சூரத்துல் பாத்திஹாவை 4 முறை ஓதினால் 4000 தீனார்கள் தர்மம் செய்த நன்மை பெறுவீர்.

3. நான்காம் கலிமாவை 10 முறை ஓதினால் கஃபாவை தவாபு செய்த நன்மை பெறுவீர்.

4. லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம் என்று 10 முறை ஓதினால் சுவனத்தில் உமது இடத்தை பாதுகாத்த நன்மையை பெறுவீர்
.
5. அஸ்தக்பிருல்லாஹில் அளீம் வ அதூபு இலைஹி என 10 முறை ஓதினால் உமது எதிரியை கொன்றதற்கு சமம் என கூறினார்கள்.

இன்ஷா அல்லாஹ் நாமும் ஓதி நன்மை பெறுவோம்.

No comments: