Monday, April 6, 2020

KV Kottai குழந்தை விநாயகர் கோட்டை

K.v.kottai is a Village in Thiruvarankulam Block in Pudukkottai District of Tamil Nadu State, India. It is located 16 KM towards East from District head quarters குழந்தை விநாயகர் கோட்டை
தமிழ்நாடு 622301, இந்தியா













#Kaniraja

நல்லூர் மைந்தன்

லாக் டவுனின் போது பலர் கற்றுக்கொண்ட உண்மை.
1. அமெரிக்கா முன்னணி நாடு அல்ல.
2. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது.
3. ஐரோப்பியர்கள் படித்தவர்கள்.ஆனால்
அவர்கள் நாம் நினைக்கும் அளவுக்கு அல்ல.
4. ஐரோப்பாவிற்கோ, அமெரிக்காவிற்கோ செல்லாமல் நம் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கழிக்க முடியும்.
5. இந்தியர்களின் நோய் எதிர்ப்பு சக்தி உலக மக்களை விட மிக அதிகம்.
6. பாதிரியார், அர்ச்சகர்கள், குருக்கள், பூசாரி, மௌலவி, மதகுருமார்கள், சாமியார்களால் ஒரு நோயாளியையும் காப்பாற்ற முடியாது.
7. அரசு சார்ந்த சுகாதார ஊழியர்கள், காவல்துறையினர், நிர்வாகப் பணியாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் ,கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் அல்ல.
8. தங்கம் மற்றும் எரிபொருளுக்கு நுகர்வோர் இல்லாமல் உலகில் எந்த முக்கியத்துவமும் இல்லை.
9. இந்த உலகமும் தங்களுக்கு சொந்தமானது என்று விலங்குகளும் பறவைகளும் முதல்முறையாக உணர்ந்தன.
10. நட்சத்திரங்கள் உண்மையில் மின்னும், இந்த நம்பிக்கை முதலில் பெருநகரங்களின் குழந்தைகளுக்கு ஏற்பட்டது.
11. உலகின் பெரும்பாலான மக்கள் தங்கள் வேலையை வீட்டிலிருந்தும் செய்யலாம்.
12. நாமும் நம் குழந்தைகளும் 'பாஸ்ட் பூட் ' இல்லாமல் கூட வாழலாம்.
13. தூய்மையான வாழ்க்கை வாழ்வது கடினமான காரியம் அல்ல.
14. பெண்கள் மட்டுமே உணவு சமைக்க வேண்டும் என்று கிடையாது.
15. சமூக ஊடகம் பொய்கள் மற்றும் முட்டாள்களின் ஒரு கூடாரம் மட்டுமே.
16. நடிகர்கள் பொழுதுபோக்குக் கலைஞர்கள் மட்டுமே, வாழ்க்கையில் உண்மையான ஹீரோக்கள் அல்ல.
17 இந்தியப் பெண்கள் காரணமாக வீடு கோயிலாக மாறும்.
18. பணத்திற்கு மதிப்புக் குறைவே.
19. இந்தியப் பணக்காரர்கள் பலர் நற்குணம் நிறைந்தவர்கள்.
20. இக்கட்டான நேரத்தை இந்தியரால் மட்டுமே கையாள முடியும்.
21. ஒற்றைக் குடும்பத்தை விடக் கூட்டுக் குடும்பம் சிறந்தது.

#Copy
#நல்லூர் மைந்தன்
#Mr.Raja Mohamed

தொடர்ந்து எழுந்து நிற்கிறேன்.

என்னை நினைத்து யாரும் அழுது விட வேண்டாம்
எனக்காக நானே அழுவதில்லை இப்போது
என்னை நேசிக்கும் வாய்ப்பை
யாரிடமும் நான் கொடுத்தது இல்லை.
யாரோ ஒருவர் தூக்கியெரியும் வரை
அவர்களிடத்தில் நான் இருந்ததில்லை.
இது தான் நீயென என்னை
வரையறுக்கும் தகுதி எவரிடமும் இல்லை.
என் சிரிப்பிற்கு யாரிடமும்
விளக்கம் கொடுக்கும் அவசியம் இருந்ததில்லை.
என் முடிவுகள் தவறென்று
எவராலும் என்னைத் தீர்மானிக்க முடிவதில்லை.
ஏன் அழுகிறேன் என்று
எவரும் என்னிடம் கேட்க நினைத்ததில்லை.
என் கோபத்திற்கான காரணம்
எதுவென்று யாரும் தெரிந்து கொள்ள நினைப்பதில்லை.
நான் அழுதிருக்கிறேன்.
அனாதையாக நிறுத்தப்பட்டு இருக்கிறேன்.
புறக்கணிக்கப்பட்டு இருக்கிறேன்.
வலிக்க வலிக்க கொன்று இருக்கிறார்கள்.
வாய் விட்டு அழ முடியாமல் கதறி இருக்கிறேன்.
தோற்றும் இருக்கிறேன்.
தொடர்ந்து எழுந்து நிற்கிறேன்.
இப்பொழுதெல்லாம் இவர்களில் யாரையும்
நான் நம்புவதும் இல்லை.
நான் சிரிக்கும் போது
அவர்கள் அழத் துவங்கி இருக்கிறார்கள்.
வாழ்க்கை மாறும் என்று நான் காத்திருந்ததில்லை.
அதை மாற்ற முடியும் என்று மாற்றிக் காட்டும் வரை,
இங்கு எதுவுமே மாறாது
இப்போதும் சிரிக்கிறேன் ......
என் சிரிப்பைக் கண்டு
யாரெல்லாம் அழுது கொண்டு இருப்பார்களோ தெரியவில்லை........
அன்புடன் உங்க கனிராஜா