மருத சந்தையில
மல்லிகப்பூ மந்தையில
மலராத மல்லி பார்த்து
அள்ளிவந்து அத முடிஞ்சு
மண்டையில தடமெடுத்து
கொண்டையில இடம் கொடுத்து
மணக்கும் மல்லிகைய
மாமன் இவன் சூட்டிவிட
அன்னாந்து முகம் பார்த்து
ஆசை மொழி சொன்னவளே
உன் அங்கமெல்லாம் அடகுவச்சா
தங்கமெல்லாம் செல்லாது
அடகு வங்குனவன் ஆயிசும் குறையாது.
உன் அழகையெல்லாம் எழுதிவைக்க
அந்த ஆகாயம் பத்தாது
ஆனவரை எழுதி இருக்கேன்
ஆசையா படிச்சுக்கடி...
கருகருன்னு வளர்ந்த முடி
நெடு நெடுன்னு நீண்ட முடி
காத்தோடு கையசச்சு
காதோரம் சுருண்டுவந்து
நெத்தியில நெளிவு சுழிவா
கவிஎழுதும் கன்னி முடி.
மாயமோ மந்திரமோ செஞ்சு
மாலையில் மல்லிகையா
மலரும் முடி
நெருப்பா நீ விலகி நின்னாலும் காத்துல
கருப்பா நீந்திவந்து நெருங்கி வரச் சொல்லுதடி.
நறுக்கிவச்ச நெலாத்துண்டு நெத்தியோ
உருக்கிவைக்கும் கொடைவெப்பத்தை
வியர்வையா வெளியில் விட்டு
முத்து முத்தா பூத்து மொரச்சு என்னை பார்க்குதடி.
சுருங்கி விரிஞ்சு ஏறி இறங்கி
புரியாத மொழி பேசும் புருவமொ
புத்தி செத்த பித்தனாய்
புலனடக்கி போகுதடி.
அயிரைமீனு அலையும்
அல்லி குளத்துக்குள்ள
வைரமீனா கண்டெடுத்த
கண்ணுரெண்டும்
உயிரை மீனா தரையில்
தள்ளி தத்தளிக்க வைக்குதடி.
முன்னாடி நான் வந்து
முட்டி உன்ன நிக்கயில
மூக்குன்னு பெருவச்ச
இரெட்டைகுழல் துப்பாக்கி
மூச்சு தோட்டாவால்
முத்தம் சுட்டு வைக்குதடி.
ஒட்டாம ஒட்டி நிக்கும் உதடு ரெண்டும்
சுத்தாம சுத்திவரும் சூரியனா
சுருக்குன்னு சுட்டு வச்சு
சும்மா இருக்கும் இளம்வயச
நறுக்குன்னு நாலு முத்தம்
’இச்’ சுன்னு இட்டுவைக்க
இளமனசின் இச்சைய துண்டுதடி.
கடவாயி கன்னம் ரெண்டும்
காலியா கெடக்குதடி
கண்ணக் கொஞ்சம் மூடிக்கடி
கடனா ரெண்டு முத்தம்
கடைசியா கொடுத்துபுட்டு
கவிதைய முடிக்கிறேண்டி.
பாதையில போகும் போது
பார்த்துக் கொஞ்சம் போயெண்டி
பாதிவரை நான் படிச்ச என்
பட்டிக்காட்டு கவிதையே.
உங்கள் கனி
No comments:
Post a Comment