Thursday, June 2, 2011

அன்பில் மறு ஜன்மம்

பத்து மாதம் சுமந்து
பாலூட்டி சீராட்டி வளர்த்து
என்னுடன் படித்து
ஓடி விளையாடி

...வளர்ந்ததும் தோழியாகி
இரவெல்லாம் விழித்திருந்து
உடனிருந்து உற்சாகமூட்டி
உன் அன்பை கொட்டினாய்

வாழ் நாளெல்லாம் உன்
அன்பில் நனையும் எனக்கு
ஒரு நாளில் நன்றியை
சொல்ல முடியுமா??

நான் வளர உரமானாய் நீ
என் வாழ்க்கையில் வரமானாய் நீ
இனி மறு ஜன்மம் உண்டெனில்
என்னை பெற்றெடுப்பாய் நீ
 
 

No comments: