Saturday, July 16, 2011

எல்லாம் உனக்காக...

உனக்காக.... எல்லாம் உனக்காக...!
உனைப்பார்த்த கண்களே...
உள்ளம் தொலையக் காரணம்..!

உன்னிடம் தொலைத்ததை...
உடன் வாங்கவே ஆசை..!

உனக்கு என்னென்ன பிடிக்கும்...
உள்ளம் அறிய ஆவல்...!

உனக்கு என்னைப் பிடிக்குமா...
உனையறிய ஆவல்...!

உன் மனைவி எனும்,
வரம் கிடைக்காது போனாலும்...
உன் தோழியாகும்,
வரமாவது கிடைத்ததே...
நன்றிடா... தோழா...!

No comments: